Tuesday, December 26, 2017

’எங்க உயிரை கொடுத்தாவது இங்கு மதுக்கடை வராமல் தடுப்போம்!' - கொந்தளிக்கும் கிராம மக்கள்

Salem: 

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மதுக்கடைகளைக் கிராமத்துக்குள் கொண்டு வந்து கிராம மக்களின் கலாசாரம், பண்பாட்டையும் கெடுத்து கிராமப்புற பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்க முயல்கிறார்கள். அதை, எங்கள் உயிர் போனாலும் அனுமதிக்க மாட்டோம் என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கிராமத்தின் பிரதிநிதிகளாக 15 பேர் வந்திருந்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்களிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
இதுபற்றி வெங்கடசாமி, ''நாங்க ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா குலவபாளையம் பஞ்சாயத், மொட்டணம் கிராமத்திலிருந்து வந்திருக்கிறோம். எங்க கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் எந்தவித கலாசார சீரழிவும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். நம்பியூரில் டவுன் பகுதியில் ரோட்டோரமாக 2 டாஸ்மாக் கடைகள் இருந்தன.
அந்த ரெண்டு கடைகளும் சாலையோரத்தில் கடைகள் இருக்க கூடாது என்பதால் அந்தக் கடைகளை மூடிவிட்டார்கள். அதில் ஒரு கடை எங்க கிராமத்தில் உள்ள மேட்டுக்கடை பகுதியில் திறப்பதற்கான அனைத்து வேலைகளும் செய்துகொண்டிருக்கிறார்கள். அதற்கான கட்டடங்களைக்கூட கட்டிவிட்டார்கள். இந்த இடத்தில் மதுக்கடை வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏற்கெனவே மது அருந்தி உயிரிழந்தவர்கள், மதுவால் வாழ்க்கை இழந்தவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். மது குடிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்து வாழக்கூடியவர்களும் ஆபத்து நிகழ்கிறது.

No comments:

Post a Comment