ஒருவரை நாம் அதிகம் நேசிக்கின்றோம் என்றால் அந்த நேசிப்பானது மென்மையான தாகவும் இருக்கலாம் முரட்டுத்தனமாகவும் இருக்கலாம்.
இந்நிலையை மேலோட்டமாக பார்க்கும் பொழுது பிரச்சினைகளால் பிரிந்து விடுகிறோம்.
பல நிகழ்வுகளை உள்ளார்ந்து பார்க்கும் பொழுது தான் புரிகிறது உண்மையான அன்பினால் நிகழ்ந்த மூர்க்கத்தனமான போராட்டம் என்பது.
மனதில் வருத்தம் மேலோங்கி இருப்பதாலும் ஒருவித செருக்கினாலும் தான் என்ற அகந்தை முன்நிற்கும் அப்போது தன் மனம் எதையும் ஏற்காது அதனால் பல பல பின்விளைவுகளை சந்திக்கின்றோம்.
எப்போது நாம் உள்ளார்ந்து பார்க்கின்றோமோ அப்போது நம் மனநிலை அமைதியாக இருந்தால் அது அன்பின் வெளிப்பாடாகவும்.
அதுவே மூர்க்கத்தனமாக இருந்தால் உயிரையே இழக்கும் அல்லது உயிரையே எடுக்கும் சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும்.
அதனால்தான் நம் முன்னோர்கள் அதீத மகிழ்ச்சியாக இருக்கும் போதோ அல்லது அதீத கோபமாக இருக்கும் போதோ எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அமைதியாக இருக்கும்போது மட்டும் ஆழ்ந்து சிந்தித்து முடிவுகளை எடுக்க அறிவுரித்தினர்கள்.
இது மனதில் ஏற்படும் நூலிழை மாற்றங்களே இதை புரிந்து கொண்டால் எங்கும் எப்போதும் அன்பும், அமைதியும் நிலைத்திருக்கும்.
இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் நலமும், வளமும் பெற்று இன்பமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
