Friday, September 26, 2025

மகாசிவராத்திரி

ஓம் சிவாய நம !


மகா சிவராத்திரி


இந்துக்களால் மிகப்கொபெரிய அளவில் கொண்டாடப்படும் விரதங்களில் சிவனுக்குரிய மிகஉண்ணதமான மிகமுக்கியமான விரதமாக இவ்விரதம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் நான்கு ஜாமமாக அபிஷக, ஆராதணைகளுடன் மிகசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஹேவிளம்பி ஆண்டு மாசி மாதம் 1-ம் நாள் (13-02-2018) செவ்வாய்க்கிழமை அன்று பல சிறப்புமிக்க மகா சிவராத்திரியானது வருகிறது. இன்னன்நாளில் எல்லாம் வல்ல எம்பெறுமானை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோமாக.

ஓம் நமசிவாய !

முதல் ஜாமம் முதல் நான்காம் ஜாமம் வரை
நாம் கடைைபிடிக்க வேணண்டிய வழிமுறைகள்

முதல் ஜாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
அபிஷேகம் - பஞ்சகவ்யம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை, அலரி
நிவேதனம் - பால் அன்னம்,சக்கரைபொங்கல்
பழம் - வில்வம்
பட்டு - செம்பட்டு
தோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி - புட்பதீபம்

இரண்டாம் ஜாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் - பலா
பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் - அகில், சந்தனம்
புகை - சாம்பிராணி, குங்குமம்
ஒளி - நட்சத்திரதீபம்

மூன்றாம் ஜாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் - எள்அன்னம்
பழம் - மாதுளம்
பட்டு - வெண் பட்டு
தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை - மேகம், கருங் குங்கிலியம்
ஒளி - ஐதுமுக தீபம்

நான்காம் ஜாமம் :

வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண்சாதம்
பழம் - நானாவித பழங்கள்
பட்டு - நீலப் பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
புகை - கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி - மூன்று முக தீபம்

No comments:

Post a Comment